நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் நீர்கொழும்பு - அக்கரபனா என்ற இடத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனுக்கே வைரஸ் தொற்றியுள்ளது.
இவர் கடந்த 3ஆம் திகதி இருமல் மற்றும் சுவாவப்பிரச்சினை காரணமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பணிப்பாளர் சுஜீவரத்நாயக்க தெரிவித்தார்.
சிறுவன் நீர்கொழும்பின் பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும், இவரது குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவரது வீடு அமைந்துள்ள பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிறுவனின் தாயார் கர்ப்பிணி என்றும் சிறுவனின் பாட்டியே அவருடன் வைத்தியசாலையில் இருந்தார் என்றும், இவரது குடும்பத்தில் மொத்தம் 6 பேர் எனவும் கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments