அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பற்றை சேர்ந்த ஒருவர் முழுமையாகக் குணமடைந்து இவ்வாறு இன்று வீடு திரும்பினார்.
வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தமான அம்புலன்ஸில் அக்கரைப்பற்றுக்கு அழைத்துவரப்பட்டு அவரின் வீட்டில் இறக்கிவிடப்பட்டார் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
0 comments: