Home » » மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள துரித இலக்கம் அறிமுகம்

மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள துரித இலக்கம் அறிமுகம்

நாட்டில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையினால் போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கும், அவ்வாறு அடிமையானவர்களை குணப்படுத்துவதுற்குமாக தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபை துரித நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
இச்சபையினால் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் துண்டுபிரசுரங்கள் வெளியிடுதல், விசேட உளவள ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு புதிய துரித இலக்கமான 0710301301 இனை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இதனூடாக பொதுமக்கள் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலேசனைகளை 24 மணிநேரமும் குறித்த துரித இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துவன்மூலம் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியுமெனன தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உதவி உளவியல் ஆலோசகர் ஜீ.விஜயதர்சன் தெரிவித்துள்ளார்.
சட்டமும், ஒழுங்கும் மற்றும் தென்பகுதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இச்சபையானது 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச் சட்டத்தின்கீழ் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இலங்கையில் போதையூட்டும் ஒளடதங்களின் துஷ்பிரயோகத்தை தடுத்தல், கட்டுப்படுத்தல், போதையூட்டும் ஒளடத பாவனையாளர்களுக்கான சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரதான தேசிய நிறுவனமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |