Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

28இலட்சம் தொற்றாளர்கள் : 196,000 உயிரிழப்புகள்



உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 இலட்சத்து 30ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2 இலட்சத்தை அண்மித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் அதிகமாக அமெரிக்காவே பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இது வரையில் 9 இலட்சத்து 27ஆயிரத்து 150 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 52,400 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் அங்கு 3000 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அந்த நாட்டில் நியூயோர்க் நகரிலேயே அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி அந்த நகரில் 16,646 பேர் உயிரிழந்துள்ளனர். -(3)

Post a Comment

0 Comments