Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீன் வியாபாரிக்கு கொரோனா! மூடப்படுகின்றது பேலியகொட மீன் சந்தை

பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பேலியகொட மீன் சந்தையை நாளை முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன் வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
பேலியகொட மீன் சந்தை வளாகத்தில் 154 மீன் கடைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், அவற்றின் விற்பனையாளர்கள் நாளை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments