Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வவுனியா வைத்தியசாலையில் சிறுமி திடீர் மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமியே மரணமடைந்துள்ளார்.
இதேவேளை குறித்த சிறுமி கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவு உடனடியாகவே தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments