Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கைது செய்யப்பட்ட ரஞ்சன் பிணையில் விடுதலை

பொலிஸாரின் கடமைகளுக்கு தடையேற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்தியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீற உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ரஞ்சன் அண்மையில் அவரது மாதிவல இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த ரஞ்சன், ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உட்பட நிவாரணங்களை வழங்குவதை தடுப்பதற்காகவே பொய்யான குற்றச்சாட்டில் தன்னை கைது செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
சிறையில் இருந்து திரும்பிய பின்னர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்க போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

Post a Comment

0 Comments