ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தற்போது, மேலும் 24 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து 295 ஆக உயர்ந்திருக்கிறது.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான இடங்களுக்கு இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் சுகாதார விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, சமூக இடைவெளியினை தொடர்ந்தும் பேணுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: