தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் கிராமப்புறங்களில் புதுவருட கொண்டாட்டங்களை தடுத்த நிறுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருட தினம் நாளையதினம் பிறக்கவுள்ளது.இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்துக்கள்ளாகியுள்ளனர். அத்துடன் நாளாந்தம் புதிய புதிய கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே கிராமப்புறங்களில் பண்டிகை கொண்டாட்டங்களை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments