எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சபரகமுவ, மேல், மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் இன்று காலை வேளையில் பனி மூட்டம் நிறைந்து காணப்படும்.
கடந்த 5ஆம் திகதி தொடக்கம் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுத்து வரும் நிலையில், இன்றைய தினம் (11) பலங்குதுரை, அஹடுவெவ, கதுருகஸ்தமன, தமரெவி்ல்லு ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் பெற்று காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: