Home » » விமான நிலையத்தில் பொய் கூறி ஸ்ரீலங்காவிற்குள் நுழைந்த சுவிஸ் போதகர்! யாழ் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

விமான நிலையத்தில் பொய் கூறி ஸ்ரீலங்காவிற்குள் நுழைந்த சுவிஸ் போதகர்! யாழ் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகா் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 போ் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணா்வு வேண்டும்.
மேற்கண்டவாறு யாழ்.மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவா் முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளாா்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடா்பாக ஊடகங்களை சந்தித்து கருத்துகூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. சுவிஸ் போதகருடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் 1ம் கட்ட பாிசோதனைகள் நிறைவடைந்திருக்கின்றது. எனினும் 1ம் கட்ட பாிசோதனையில் 80 தொடக்கம் 90 வீதமானதே அடையாளம் காணப்படும்.

ஆகவே 2ம், 3ம் கட்ட பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தொற்றுள்ளவா்கள் பூரணமாக அடையாளம் காணப்படுவதுடன், தொடா்ந்து ஊரடங்கு சட்டத்தின் ஊடாக சமூக இடைவெளி பேணப்படுவதன் ஊடாக யாழ்.மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றை முற்றாக நீக்க முடியும்.
இது இலங்கையின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். மேலும் மாவட்டத்தில் தொற்று இல்லாமையினை தொடா்ந்து பேணுவதற்காக சில கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் உள் நுழைவதற்கு 2 தரைவழி பாதைகளே உண்டு.
அந்த பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், காய்ச்சல் மற்றும் தொற்று தொடா்பான ஆரம்ப பாிசோதனைகளை மேற்கொள்வதற்கான வதசிகளை செய்வதன் ஊடாக நிரந்தரமாக நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். அதற்கு முன்னா் யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவா்கள் நோ்மையாக தங்களுக்கு தொற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தவேண்டும்.
குறிப்பாக சுவிஸ் போதகா் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தும் விமான நிலையத்தில் உண்மையை மறைத்து ஒரு பொய்யை கூறியதால் 7 போ் நோய்வாய்ப்பட்டதுடன், யாழ்.மாவட்டத்தில் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்களும் பாதுகாப்பாக இருந்து தொற்றிலிருந்து விடுபட உதவவேண்டும் என்றாா்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |