ஸ்ரீலங்காவில் மேலும் ஏழுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 197 ஆக அதரிகரித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் எவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தற்போது மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது மக்களை தொடர்ந்தும் விழிப்பாக இருக்குமாறும், சமூக இடைவெளிகளை தொடர்ந்தும் பேணுமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: