Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை மூட வேண்டியதில்லை! சுகாதார அமைச்சர்

சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடிந்ததாகவும் இதனடிப்படையில் நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சமூகத்திற்குள் நோய் பரவுவதை தடுக்க முடிந்துள்ளது. தற்போது சுமார் ஒரு மாத காலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாட்டை ஓரிடத்தில் வைத்துள்ளோம்.
நாட்டின் பொருளாதாரம் பெரியளவில் பிரச்சினைக்குரிய நிலைமையாக மாறி வருகிறது. தினமும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை மூடி வைக்க வேண்டும் என நான் நம்பவில்லை.
சமூகத்திற்குள் நோய் பரவாத அளவுக்கு நிலைமை இருப்பதால், நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது குறித்து சிந்திக்க தற்போது காலம் வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை மூடி வைத்திருக்கும் நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என நான் தனிப்பட்ட ரீதியில் நம்புகிறேன் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments