பாகிஸ்தான் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ஜாபர் சர்ஃபராஸ்,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
50 வயதான இவர் கடந்த மூன்று நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் தொழில்முறை கிரிக்கெட் வீரரானார் சர்ஃபராஸ். சர்ஃபராஸ் 1988ம் ஆண்டு அறிமுகமானார்,
மேலும் பெஷாவருக்காக 15 முதல் தர ஆட்டங்கள் விளையாடி 616 ஓட்டங்கள் எடுத்தார்.
1994ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு ஆறு ஒருநாள் ஆட்டங்களில் 96 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது. பின்னர் அவர் 2000ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் மூத்த மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெஷாவர் அணிகளைப் பயிற்றுவிக்கும் பணியை ஏற்றுக்கொண்டார்.
பாகிஸ்தான் சர்வதேச வீரர் அக்தர் சர்ஃபராஸின் சகோதரர் ஜாபர்.பெருங்குடல் புற்றுநோய் காரணமாக, அதே நகரத்தில் 10 மாதங்களுக்கு முன்பு அக்தர் காலமானார்.
பாகிஸ்தானில் மொத்தம் 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் பெஷாவர் பகுதியில் மட்டும் 744 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 100 பேர் இறந்துள்ளனர்.
0 Comments