Home » » நோயாளர் எண்ணிக்கை உச்சத்தை தொடும் அபாயத்தில் ஐ.டி.எச் வைத்தியசாலை

நோயாளர் எண்ணிக்கை உச்சத்தை தொடும் அபாயத்தில் ஐ.டி.எச் வைத்தியசாலை


கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான ஐ.டி.எச் வைத்தியசாலையின் நோயாளா கொள்ளளவு எண்ணிக்கை உச்சத்தை தொடும் அபாய நிலையை எட்டியுள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படக்கூடிய உச்ச எண்ணிக்கையை எட்டியுள்ளதாக வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வருவோரில் சிலர் குணமடைந்து வைரஸ் தொற்று இல்லையென்று நிரூபணமாகும் வரையில் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
புதிதாக நோயாளிகளை உள்வாங்க வேண்டுமாயின் தற்பொழுது குணமடைந்து மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளை வேறும் மருத்துவமனைகளுக்கு இடமாற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கொரோனா நோய்த் தொற்று பரவுவதனை தவிர்க்கும் வகையில் மக்கள் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக காவல்துறையினருக்கு அஞ்சி செயற்படாது உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |