Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றிய பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்

பொல்பித்திகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணொருவர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய மூன்று நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 134 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 481 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments