Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரிப்பு


ஜப்பானின் யென் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் வீழ்ச்சியடைந்தமையினால் வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ்,
இவ்வாறு நாணயங்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து இதுவரையில் சொகுசு வரியின் காணப்படாத சாதாரண மற்றும் மத்திய ரக வாகனங்களுக்கும் சொகுசு வரி செலுத்த நேரிட்டுள்ளது.
நாட்டில் சிலவும் நிலைமையின் கீழ் ஷோரூம்கள் மாத கணக்கில் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கி கடனில் விதிக்கப்பட்டுள்ள வட்டியை நீக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
எனினும் இதுவரையில் வங்கிகளிடம் இருந்து எவ்வித பதிலும் அதற்காக கிடைக்கவில்லை.
இந்த அனைத்து விடயங்களினாலும் வாகனங்களின் விலை 15 வீதத்தில் அதிகரித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments