பாதம் மற்றும் பாதங்களில் உள்ள விரல்கள் ஊதா அல்லது நீல நிறமாக மாறி கடுமையான வலி ஏற்படுமாயின் அதுவும் கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான நோய் அறிகுறி என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் தொற்று நோய்கள் தொடர்பான பிரிவின் தலைவர் மருத்துவர் ஏவின் லோடென்பேக் தெரிவித்துள்ளார்.
வேறு நோய் அறிகுறிகள் தென்படாத சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதங்கள் மற்றும் பாத விரல்களில் குறத்த அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகள் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சில நோயாளிகளின் பாதங்கள் மற்றும் கால் விரல்களில் ஏற்படும் வலி 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும் என்பதுடன் பெரும்பாலானவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் வரை நோயின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை தவிர சுவை மற்றும் வாசனையை அறியும் திறன் இல்லாமல் போவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றியமைக்கான அறிகுறி என இத்தாலி ஆய்வாளர்கள் கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தனர் எனவும் மருத்துவர் ஏவின் லோடென்பேக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: