Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திங்கள் முதல் பகலில் ஊரடங்கைத் தளர்த்த முடிவு?

கொரோனா இடர் வலயத்தில் உள்ளடக்கப்படாத பகுதிகளில், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், பகலில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பிரிவின் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊழியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன், 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை அடுத்த வாரம் முதல் பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments