மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரட ங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்களை வியாபாரத்திக்கு அனுமதிக்க மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 20ம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய மக்களுக்கு தேவையான வர்த்தக நிலையங்களை சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல் விதிமுறைகளுடன் திறந்து வியாபாரத்திக்கு அனுமதிக்க இன்று (17)மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் அனுமதிக் கப்பட்டி ருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மாவட்ட செயலாக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்செயலணியின் விசேட கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 20ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும்போது ஆடைவிற்பனை நிலயங்கள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், சில்லறை விற்பனை நிலயங்கள், நகைவிற்பனை நிலயங்கள் அன்றயதினம் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நேரங்களில் தமது விற்பணிகளில் ஈடுபடமுடியுமென்றும் இதன்போதுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல் விதி முறைகளான 3 மீட்டர் சமூக இடைவெளி, கடைக்குள் ஐவருக்குட்பட்டவர்கள்மாத்திரம் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வர்த்தக நிலையங்கள் பொறுப்பெடுத்தல். இந்த சுகாதார விதிமுறைகள் பின்படுத்தப்படுகின்றமையை உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகள் பரிசீலித்தல் பின்பற்றாதவர்களை எச்சரித்தல் தொடர்ந்தும் அறிவுறுத்தலை பின்பற்ற மறுப்போரின் வர்த்தக நிலையங்களை மூடிவிடும் அதிகாரத்தினை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவ்வப்பகுதி உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மேலும் தெரிவித்தார்.
இவ்விதம் திறக்கப்படும் சிகையாலங்கார நிலையங்களுக்கு வருகைதருவோர் முடிகளை அழகுபடுத்த தாமாக கொண்டுவரும் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டுமென்றும் சில்லறைக்கடைகளில் மக்களுக்கு தேவையான அளவு அரிசிகளைதட்டுப்பாடின்றியும் வைத்திருக்க வேண்டும் எனவும் சிவப்பு வெள்ளை நாட்டரிசியை ஒருபோதும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல முடியாதென்றும் கீரிச்ச்சம்பா இன அரிசியினை மாத்திரம் அவ்வப்பகுதி பிரதேச செயலாளர்கள் சிபாரிசில்பெறப்பட்ட பொலிஸ் அனுமதிப்பத்திரம் பெற்று வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியுமென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
இந்த மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, மேலதிக அர சாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் உட்பட செயலணியின் பலபிரிவு அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலீஸ் உயர் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
Media Unit, - Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
0 comments: