கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் இப்பிரதேச மக்களும், ஏனைய குடியிருப்பு பிரதேச மக்களும் இரவு நேரங்களில் திண்மக் கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுவதனால் நீரோட்டம் இன்மையும் துர்நாற்றமும் வீசுவதுடன் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இக்கால்வாய்க்கு அருகாமையிலேயே நோயாளிகளை பார்வையிடச் செல்வதற்குரிய பாதை மற்றும் வீட்டுத்திட்ட மக்களின் பிரதான போக்குவரத்து பாதை இக்கால்வாயின் மேலாக அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் பிரயாணத்தின் போதும் குடியிருப்புப் பக்கமும் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு மற்றும் வாந்திபேதி போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உரிய அதிகாரிகள் குற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தை பார்வையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: