Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு எச்சரிக்கை


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாரியளவு சமூகத்திற்குள் பரவவில்லை என்ற போதிலும் அடுத்த இரண்டு வாரங்கள் அவதானமிக்கதென வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்கள் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் ஆபத்தாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் நோய் அறிகுறிகள் இல்லாமல் நோய் பரப்புபவர்களிடம் சிக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments