Home » » வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை- மட்டு மாநகர முதல்வர்

வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை- மட்டு மாநகர முதல்வர்

நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இன்று(05.04.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முதல்வர்.. மாநகர எல்லைக்குள் சந்தை தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது, வீதியோர வியாபாரங்களுக்கு தடை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தல்  போன்ற செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்..

நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் பொது சந்தை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும்நோக்கத்தோடு கடந்த புதன் கிழமை பின்பற்றிய நடைமுறைகளை போன்று மட்டக்களப்பு மாநகர சபைக்குஉட்பட்ட சந்தைகளை பல இடங்களில் பிரித்து வைப்பதன் மூலம் பொது மக்கள் கூடுகின்ற சந்தர்ப்பங்களைகுறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்மட்டக்களப்பு பொதுச்சந்தையில் இறைச்சி மற்றும் மீன்களை மட்டும் விற்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதோடு மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களை ட்டக்களப்பு வெபர் விளையாட்டுமைதானம்கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானம்ஊறணி சரஸ்வதி வித்தியாலய மைதானம் மற்றும்தாண்டவன்வெளி லீனியர் பூங்கா ஆகிய இடங்களில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களிலேயே பொது மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்கொள்வனவு செய்யும் பொருட்கள் தரமானதாக உள்ளதா  என்பதை பரிசோதிக்க பொது சுகாதார துறையினர்அங்கு நிறுத்தப்படுவார்கள் அவர்கள் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து தரமற்ற பொருட்களை விற்பனைசெய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

நாளை பொது மக்கள் கூடுகின்ற இடங்களில் ஒரு நபருக்கு இடையிலான தூரம் குறைந்தது 3 அடியாகஇருக்குமாறு நின்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

இந்த செயற்பாட்டை அமுல்படுத்துவதற்கு முப்படையினருடன் மாநகரசபை தொண்டர்களையும் இணைத்துஒவ்வொரு இடங்களிலும் பத்து தொண்டர்கள் வீதம் மாநகரசபை அடையாள அட்டையுடன் கடமையில்ஈடுபடுத்தப்படுவார்கள் இதன் மூலம் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்து கொள்ள முடியும்இந்தஏற்பாடுகளை மக்கள் மதித்து அவற்றை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இதேவேளை தெருவோர வியாபாரங்கள் முற்றாக தடை செய்யப்படும் இதற்காக முப்படையினரும் களத்தில்இறக்கப்பட்டுள்ளனர்அதே போன்று மாநகரசபை உத்தியோகஸ்தர்களும் வாகனங்களில் வந்து தெருவோரம்வியாபாரம் செய்யும் பொருட்களை பறிமுதல் செய்வார்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பொருட்கள்மீண்டும் தரப்படமாட்டாது. குறித்த பொருட்கள் உணவின்றி பட்டினியில் வாடும் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.

குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்அவ்வாறு வெளிமாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக மாநகரசபைக்குஅல்லது MOH க்கு அறிவிக்க வேண்டும்அவ்வாறு அறிவிக்கும் பட்த்தில் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மட்டக்களப்பு நகருக்குள் பழக்கடைகளும்மருந்தகங்களும்பல சரக்கு கடைகளும்  மாத்திரமே திறக்கப்பட வேண்டும்ஏனைய அனைத்து கடைகளும்மூடப்பட வேண்டும்இந்த நடவடிக்கைகள் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்கே எடுக்கப்படுகிறதுவியாபாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |