Home » » கிழக்கு மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை - விவசாயிகள் அசமந்தப் போக்கு - நாளை புதிய நடைமுறைகள்

கிழக்கு மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை - விவசாயிகள் அசமந்தப் போக்கு - நாளை புதிய நடைமுறைகள்

கல்குடா பகுதிக்கு வெளி மாவட்ட மீனவர்கள் வருகை தடை
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வெளி மாவட்டத்திற்கு மீன் கொண்டு செல்லும் நபர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டு பின்னர் திரும்பும் பட்சத்தில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தில் இருக்க வேண்டும். அத்தோடு வேறு மாவட்டத்தினர் யாரையும் வாகனத்தில் ஏற்றி வரக் கூடாது.
வெளி மாவட்டங்களில் இருந்து மீன் கொள்வனவிற்கு வரும் வாகனங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பிரதேசத்தினை காப்பாற்றும் நோக்கில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் ஆழ்கடலுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு சிறு படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விசேட கலந்துரையாடலில் மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப் போக்கு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும் விவசாய நிலப்பரப்பை கொண்ட சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வயல்களுக்கு விவசாய நடவடிக்கைக்காக செல்லும் விவசாயிகள் பாஸ் நடைமுறையை பின்பற்றாமல் அசமந்த போக்கினை கடைப்பிடிக்கின்றனர்.
குறிப்பாக காரைதீவு மாவடிப்பள்ளி சம்மாந்துறை நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து செல்லும் விவசாயிகள் தத்தமது விவசாய நிலங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.
இதனால் பாதுகாப்பு தரப்பினல் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாஸ் நடைமுறையை முறையாக அமுல்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள போதிலும் விவசாய மற்றும் அத்தியவசிய சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு சில சேவைகளுக்கு பாஸ் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இதேவேளை விவசாயிகள் அன்றாட விவசாய நடவடிக்கைகளுக்காக எதுவித தடையுமின்றி செல்ல முடியும் என அரசாங்கம் சுற்று நிருபம் மூலம் அறிவுத்துள்ள போதிலும் போலி விவசாயிகள் பலரும் இந்த முறையை தவறாக செயற்படுத்துவதனால் பாஸ் நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள வயல் பிரதேசத்திற்கு செல்லும்
விவசாயிகள் சவளக்கடை இராணுவ சோதனை சாவடியில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது வயல் விதைப்பு மற்றும் களை நாசினி தெளிக்கும் வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு விவசாய நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஆகையால் இது விடயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் இ நாவிதன்வெளி பிரதேச செயலாளர், அம்பாரை மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள், சவளக்கடை விவசாய கேந்திர நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் ஆகியோர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பாஸ் நடைமுறையையாவது ஏற்படுத்தி விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு பிரதேச விவசாய அமைப்புக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளன.
அம்பாறையில் கொரோனா வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு
கொரோனா வைரசை நாட்டில் இருந்து ஒழிக்கும் முகமாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குருதிக்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அம்பாறை மாவட் பிரதி பொஸி மா அதிபர் ஆஷா கருணாரத்ன, அம்பாறை மாவட்ட பொலிஸ் அதிகாரி ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க விஜயயசுந்தர, ஆகியோரின் நெறிப்படுத்தலில் இன்று பொலிஸ் நிலைய வளாகத்தில் காலை ஆரம்பமானது.
சமூக பொலிஸ் பிரிவு ,மத தலைவர்கள், விளையாட்டு கழகங்கள், இணைந்து கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குருதி கொடையினை வழங்கி வைத்ததுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கியின் பொறுப்பு வைத்திய அதிகாரி என்.ரமேஷ் ,தலைமையிலான வைத்தியர்,தாதியர் , நாவிதன்வெளி பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புல்மோட்டை சமுர்த்தி வங்கியினால் சமூர்த்தி கொடுப்பனவு வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோயினை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை கடுமையான முறையில் அமுல்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக நாட்டிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் முதற்கட்டமாக ஐந்தாயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது.
புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு தாங்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் என சமூர்த்தி முகாமையாளர் அறிவித்துள்ளார்.
பயனாளிகள் வீட்டினை விட்டு வெளியில் வரத் தேவையில்லை எனவும் சமூர்த்தி அதிகாரிகளினால் வீட்டுக்குச் தேடிச் சென்று வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
பயனாளிகளின் சிரமங்களை போக்கும் வகையில் தாம் வீடுகளுக்கு தேடிச் சென்று வழங்கி வருவதாகவும் புல்மோட்டை சமூர்த்தி முகாமையாளர் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை
சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6) தளர்த்தப்பட உள்ள நிலையில் சம்மாந்துறை பிராந்தியத்தில் எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(5) முற்பகல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த கலந்துரையாடலில் அனைத்து கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் போது உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றி வர்த்தகர்கள் செயற்பட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஏனைய ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என அங்கு தீர்மானம் எடுக்கப்பட்டன.
அத்துடன் இவ்வாறு திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு வருகைதரும் நுகர்வோருக்கு இடையில் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், கை கழுவுதல், முககவசம் அணிந்து கொண்டு வர வேண்டும். இவ் உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் இருந்து விளினையடி சந்தி வரையுமான பிரதான வீதியின் இருமங்கிலும் எவ்வித காரணத்தையும் கொண்டும் நடைபாதை வியாபாரிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பத்தோடு பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு நடைபாதை வியாபாரிகளும் இடையில் குறைந்து 50 மீட்டர் இடைவெளியினை பேண வேண்டும் மேலும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக
பொலிஸாரினாலும் இராணுவத்தினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்மாந்துறை பொதுச்சந்தையின் பலசரக்கு கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் என்பன தவிர்ந்த ஏனைய சகல கடைகளும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
சகல சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்பாக கட்டாயம் கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருப்பதோடு வாடிக்கையாளர்களுல்கு இடையிலான 01 மீற்றர் சமூக இடைவெளி பேணுவதற்காக வழி நடத்து ஆளனி ஏற்பாட்டினை உரிய வியாபார நிலையத்தின் உரிமையாளரினாலேயே செய்யபட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கடைகளுக்கு எதிராக சுகாதார பரிசோதகரினாலும் பொலிஸாரினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் அத்தியவசியத் தேவைகளை கருத்திற்கொண்டு நடமாடும் வியாபாரத்திற்காக அனுமதியளிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடத் தவறும் பட்சத்தில் வியாபரத்திற்காக வழங்கப்பட்ட வெளிச்செல்லும் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும்.என்பதோடு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சகல வியாபாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி எவரும் வெளியிடங்களுக்கு வர வேண்டாம் என்பதோடு பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் வரும் பொதுமக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறு பிள்ளைகளை அழைத்து வர வேணாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
முடியுமான அளவு வாகனங்களை தவிர்த்து நடையில் வருவதோடு பிரதான பாதைகளில் வாகனங்கள் தரிக்கச் செய்து வீதி நெரிசலை ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுள்ளனர்.
இது தவிர அம்பாரை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணயவிலை தீர்மானம் ஏலவே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்க நிலையங்களை சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக புலனாய்வு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |