Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விசேட அறிவித்தல் நாளைய (27.04.2020) தினம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


27.04.2020 நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் விடுமுறையில் உள்ள படையினரை மீள அழைப்பதற்காக நாளை நாடு முழுவதும்  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நாளை திங்கட்கிழமை அதிகாலை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீளவும் அன்றிரவு 8 மணிக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுப்பில் வீடு திரும்பிய முப்படையினரையும் பணிக்கு உடனடியாகத் திரும்புமாறு கோரப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முகாம்களுக்கு திரும்ப வசதியாக நாளை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments