Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய சீனாவின் “சைனா ஈஸ்டன்” விமானம் - 170 பேருடன் மீண்டும் பயணம்

இலங்கைக்கு வழங்குவதற்கு சீனாவிலிருந்து 16 தொன் மருந்துப் பொருட்களுடன் விமானம் ஒன்று ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளது.
சைனா ஈஸ்டன் - 231 என்ற குறித்த விமானம் சீனாவிலிருந்து புறப்பட்டு நேற்று இரவு 7 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானம் மீண்டும் 170 பயணிகளுடன் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவுக்கு உதவுவதாக சீனா அறிவித்திருந்தது.
அந்த வகையில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மற்றும் சில அத்தியாவசிய பொருட்களுடன் குறித்த விமானம் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments