Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறந்த உடல்களைச் சுற்றும் 1000 பைகளுக்கான கோரிக்கையின் பின்னணி என்ன? உண்மையை விளக்கிய சுகாதார பணிப்பாளர்

ஸ்ரீலங்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் சுகாதாரப் பிரிவு செஞ்சிலுவைச் சங்கத்திடம் இறந்த உடல்களை சுற்றும் பைகள் 1000 கோரியுள்ளதாக தகவல் வெளியாகியருந்தது.
எனவே அந்த 1000 பைகள் எதற்கு என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
1000 பேர் வரை உயிரிழப்பார்கள் என்ற எதிர்பார்பில் இறந்த உடலைகளைச் சுற்றும் பைகளை நாம் செஞ்சிலுவை சங்கத்திடம் கொள்வனவு செய்ய கோரவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் வீதம் மிகக் குறைவு என்பதோடு இறப்பு வீதமும் அவ்வாறே குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது நாட்டில் முன்னெடுத்துவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக, ஆயிரம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்ற துரதிஷ்டமான சூழ்நிலை ஏற்படுவதற்கு எவ்விதத்திலும் சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எமது சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அதன் காரணமாகவே இவ்வாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments