Home » » கொரோனாவால் 143 கடற்படை வீரர்கள் பாதிப்பு; நேற்று மட்டும் 53 வீரர்களுக்கு கொரோனா!!

கொரோனாவால் 143 கடற்படை வீரர்கள் பாதிப்பு; நேற்று மட்டும் 53 வீரர்களுக்கு கொரோனா!!


வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 143 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.

நேற்று மட்டும் 53 கடற்படையினர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-

"வெலிசறை கடற்படை முகாமுக்குள் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அங்குள்ள சிப்பாய்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை 143 சிப்பாய்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 84 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

ஏனைய 59 பேரும் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த நிலையில் வைத்தியசாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 53 கடற்படையினர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 16 பேர் முகாமிலும், 37 பேர் விடுமுறையில் இருந்தபோதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |