Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா வைரஸின் தீவிரம்! பேருந்துகளில் வரும் புதிய கட்டுப்பாடு

பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவதற்கு இலங்கை போக்குவரத்து சபை அவதானம் செலுத்தியுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments