Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள ஆலோசனை! இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை கண்காணிப்பதற்காக IDH வைத்தியசாலைக்கு இணையான பிரிவொன்றை பொலன்னறுவையில் ஸ்தாபித்துள்ளதாக இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
IDH வைத்தியசாலையில் மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மட்டக்களப்பு, பொலன்னறுவையிலுள்ள கண்காணிப்பு மத்திய நிலையங்களிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், IDH போன்றதொரு பிரிவை பொலன்னறுவையில் ஸ்தாபிக்குமாறு நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவின் ஆலோசனையுடன், பொலன்னறுவை வைத்தியசாலையின் ஆலோசனையின் அடிப்படையிலும் நோயாளர்களை அங்கு அனுமதிக்க முடியும்.
குறித்த பிரிவிற்கு இன்று மாலை முதல் நோயாளர்களை அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments