Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா அமைச்சரின் மகனும் தனிமைப்படுத்தப்பட்டார்! தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியத்தலாவிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இன்று காலை, அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தாக்கத்திற்கு தற்போது ஸ்ரீலங்காவிலும் 28 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்தும் ஸ்ரீலங்கா திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், பொது மக்கள் இது தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் என்றும், அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments