Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபரின் தற்போதைய நிலை!- வெளியானது மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் முதலாவதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளான இலங்கையர் குணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான நபர் ஒருவர் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகினார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கொட தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது குணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த அவர் குணமடைந்துள்ளார் எனவும், தொடர்ந்து வைத்திய சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments