Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும்? அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை கொரோனாவின் தாக்கம் இருக்கலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதன்போது பேசிய அவர், நாம் மிகவும் சிறப்பாக செயற்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் முடிவுக்கு வரலாம் என்று கூறியுள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments