Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிதீவிரமாகப் பரவும் கொரோன வைரஸ்! இந்தியாவில் மேலும் ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் இன்று மும்பை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் 125 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்றுவந்த 64 வயது நிரம்பிய நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

you may like this

Post a Comment

0 Comments