Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நபர்!

லண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் மட்டக்களப்பு நகர பகுதியில் தங்கியிருந்த நிலையில், இன்று சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முந்தினம் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடுசெல்ல அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments