Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள், வீட்டு நிலையான ​தொலைபேசி, கேபள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய , கொவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தகவல்களை விநியோகிப்பதை முன்னெடுப்பது அத்தியாவசியமான இக்காலக்கட்டத்தில், அனைத்து கொடுப்பனவுகள் நுகர்வோருக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமாக கருதி இந்த சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும்,
முன்னர் செலுத்த வேண்டிய வாடிக்கையாளருக்கான அவசர கடன் வசதி மற்றும் மேலதிக உரையாடல் காலத்தை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறும்,
அனைத்து டெலிகொம் தொலைபேசி , கையடக்க தொலைபேசி மற்றும் செய்திகளின் நேரடி தொலைபேசிகளைப் போன்று கேபள் ரிவி சேவைகளை வழங்குவோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments