Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஶ்ரீலங்காவில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் ஶ்ரீலங்காவும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
தற்போதுவரை 82 பேர் ஶ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஶ்ரீலங்காவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு அமுலில் உள்ளது.
இதேவேளை ஊரடங்குச்சட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாள் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் பொதுமக்களை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
அதற்கமைய
  • தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்
  • எல்லா சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைப்பிடித்தல்.
  • அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.
  • வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.
  • தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும்
  • வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.
  • பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
  • பொருட்களை கொள்வனவு செய்யும் பொளுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.
  • இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதில் கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர் பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.
  • வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை மாத்திரம் கடைப்பிடித்து வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.
என அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments