ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசீமுக்கு நிதி வழங்கி, அவரை வழிநடத்தியதாக கூறப்படும் 7 நபர்களை குற்றவியல் விசாரணை திணைக்களம் அடையாளம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் சட்டத்தரணி, பொறியியலாளர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு வாகன விற்பனையாளர்கள் அடங்குவதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் 7 பேரும் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் இவர்களை சிக்கவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சஹ்ரானின் நிதி மூலங்கள் இவர்கள் எனவும், 7 பேரும் பெரும் செல்வந்தர்கள் எனவும் கூறப்படுகிறது.


0 Comments