Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிணை முறி மோசடி வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு! கைதாகவுள்ள 10 பேர்

பிணை முறி மோசடி வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் இடம்பெற்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டடிருந்தது.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைவாக நீதிவான் ரங்க திஸாநாயக்க, குறித்த 12 பேருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தார்.
இதன்படி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்த நிறுவன நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ், ரஞ்ஜன் ஹலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்சிஹேவா, புத்திக சரத்சந்திர, சங்கரப்பிள்ளை பத்மநாபன், இந்திக சமன் குமார மற்றும் பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராகவே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டது.
இதேவளை 12 சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அன்றைய தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Post a Comment

0 Comments