Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் வெடித்தது கலவரம்! சிறைச்சாலையிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பி ஓட்டம்!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து 1500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாற தப்பிச்சென்ற கைதிகளில் தற்போது வரை 40 கைதிகள் மாத்திரமே பிடிபட்டுள்ளதாகவும், ஏனையவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரேசில் சா பாலோ நகரில் அமைந்துள்ள நான்கு திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அதிகளவான சிறைக்காவலர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே, இதையறிந்த கைதிகள் திட்டம் போட்டு வன்முறையில் ஈடுபட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த போதியளவு சிறைக்காவலர்கள் இல்லாததால் ஆயிரக்க கணக்கான கைதிகள் தப்பிச் சென்றதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments