Home » » ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய பகுதிகள் எவை?

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய பகுதிகள் எவை?

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தற்போது ஸ்ரீலங்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது வரை 43 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஸ்ரீலங்காவில், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இத்தாலி உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 6000க்கும் அதிகமானோர் வீடுகளில் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 3460க்கும் அதிகமானோர் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்ட குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரேஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளமையினால் விசேடமாக குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் 14 நாட்கள் மக்களுடன் ஒன்றுகூட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |