Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சத்தமில்லாது தொடரும் சிவசக்தி ஆனந்தனின் நிவாரணப்பணிகள்...




இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பட்ட பகுதிகளில் சத்தம் இல்லாமல் தனது நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

வடபகுதியில் பலர் நிவாரணப்பணிகளை செய்து முகநூல்களில் புகைப்படங்களை பிரசுரித்தும் மேலும் சிலர் ஒரு படி மேலே சென்று வழங்கப்பட்ட உணவு பொதிகளில் தங்கள் கட்சியின் பெயரையும் தங்கள் பெயரையும் பிரசுரித்து அரசியல் விளப்பரம் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள் 




இந் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் எந்தவித விளம்பரமும் இல்லாமல்  நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் செயற்பாட்டிற்கு மக்கள் அனைவரிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Post a Comment

0 Comments