Home » » இலங்கையின் செயலே உலகத்திலேயே சிறந்தது - பாராட்டிய உலக சுகாதார அமைப்பு

இலங்கையின் செயலே உலகத்திலேயே சிறந்தது - பாராட்டிய உலக சுகாதார அமைப்பு


உலகத்தையே தினம் தினம் பலியெடுத்து வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அபிவிருத்தி அடைந்த மேற்குலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸிற்கு இலக்காகிய முதல் நோயாளியைக் கண்டுபிடித்ததும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
வைரஸின் தாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அனைத்தையும் முடக்கியதோடு மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியது. இதுவரையில் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் சிலரைக் குணப்படுத்தியது.
கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமாயின் அனைத்தையும் முடக்குங்கள் என உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது கூறிவந்தது. எனினும் அபிவிருத்தி அடைந்த பல நாடுகள் அனைத்தையும் முற்றாக முடக்கியதேயில்லை. ஆனால் இலங்கையோ அனைத்தையும் முடக்கியதோடு அவ்வப்போது ஊடரங்குச் சட்டத்தை தளர்த்திய போதிலும் மக்களின் செயல் கண்டு முற்றாக முடக்கியது.
இந்நிலையில் இலங்கையின் சுகாதார சேவை ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலும் மிகச் சிறந்த ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
இலங்கையின் சுகாதார சேவையின் உயர் தரத்தின் காரணம் அது இலவசமாகக் கிடைப்பதே என்று டாக்டர் கெப்ரேயஸ் கூறியிருந்தார். இலங்கையின் அரசியல் தலைமை இலங்கை சுகாதார சேவைக்கு தெளிவான வழிகாட்டுதலை அளிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் 2018ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக சுகாதார தின கொண்டாட்டத்தில் உரையாற்றினார்.
வைத்தியர் கெப்ரேயஸின் கூற்றுப்படி, முன்னர் குறைந்த வருமானம் கொண்ட நாடாக இருந்த இலங்கை இப்போது நடுத்தர வருமான நாடாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை கிடைக்கிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு கூட இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார்.
தென் - கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குனர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங், சுகாதார அமைச்சுக்கு எல்லா இடங்களிலும் எதிரிகள் இருப்பார்கள், ஏனெனில் இது மருந்துகளின் விலையை குறைத்துள்ளதால் மிகவும் பாராட்டத்தக்கது. புகையிலையை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகவும் போற்றத்தக்கவை.
"2030 க்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய WHO திட்டமிட்டுள்ளது, ஆனால் இலங்கை ஏற்கனவே அவற்றில் சிலவற்றை அடைந்துள்ளது. தொற்றுநோயற்ற நோய்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ”என்று டாக்டர் சிங் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |