Home » » யாழ் மக்களுக்கு வடமாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

யாழ் மக்களுக்கு வடமாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தற்போது அவருக்கு கொறோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இவ் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.
குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212227278) உடனடியாக தொடர்புகொண்டு தங்களது விபரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள இதர மக்களுக்கும் தற்கால கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும் என்றும் தெரிவிக்கபட்டிருக்கும் அதேவேளை மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாக தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் படியும் கோரப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |