Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்குச்சட்டத்தினால் முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் -மக்கள் பூரண ஒத்துழைப்பு

கொரனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் அனுஸ்டிக்கப்படும் ஊரடங்குச்சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகள் தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் முடங்கியுள்ளதுடன் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுவருவதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க மட்டக்களுப்பு மக்கள் பூரண ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கியுள்ளதையும் காணமுடிகின்றது.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் செயற்பட்ட எவரும் மட்டக்களப்பில் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

















Post a Comment

0 Comments