Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் உயிரிழந்தவரின் சடலம் சீல் வைக்கப்படுகின்றது! வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் தடை


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் முதல் உயிர் நேற்று பறிபோனது.
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த குறித்த நபருடைய சடலத்தை வீட்டுக்கு எடுத்ததுச் செல்ல முடியாது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவரே நேற்று உயிரிழந்தார்.
இவர் மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்னர் தான் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட இவருடைய உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மோசமாக இருந்தது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று உயிரிழந்த குறித்த நபரின் சடலம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments