Home » » நெஞ்சுவலி என பொய் கூறிய சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி..! விடுதி முடக்கப்பட்டது, மருத்துவா்கள், தாதியா்கள் தனிமையில்..

நெஞ்சுவலி என பொய் கூறிய சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி..! விடுதி முடக்கப்பட்டது, மருத்துவா்கள், தாதியா்கள் தனிமையில்..

வெள்ளி, 20 மார்ச் 2020 06:42 PM
நெஞ்சுவலி என பொய் கூறிய சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி..! விடுதி முடக்கப்பட்டது, மருத்துவா்கள், தாதியா்கள் தனிமையில்..
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானமை, வெளிநாட்டவா்களுடன் நெருக்கமான உறவைப் பேணிய ஒருவா் உண்மையை மறைத்து நெஞ்சுவலி என கூறி வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
இதனையடுத்து உடனடியாகவே வைத்தியசாலை விடுதி முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய மருத்துவா்கள், தாதியா்கள், ஊழியா்கள் என சகலரும் தனிமைப்படுத்தப்பட் டிருக்கின்றனா்.  இந்த சம்பவம் கொழும்பு- இராகம வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது. 
ஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரிடம் கொரோனா விற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன் தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும்,
அவற்றை அவர் மறுத்துள்ளார். இதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவ தற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார்.எனினும், வைத்தியர்கள் அந்நபர் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது,
அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது. சடுதியாக அவரை தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. எனினும், குறித்த நோயாளி ஒன்றரை நாட்கள்
சாதாரண விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.இதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள்,
அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது.தொற்று தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊடகங்கள் வாயிலாக
அரசாங்கம் அறிவித்த போதிலும் , மக்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயற்படுவதில்லை என ராகம வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார். ஒருவரின் தவறால் வைத்தியசாலையில் பலரையும் தனிமைப்படுத்த
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |