Home » » மிக வேகமாக கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கும் ,வழிமுறைகள் !!! பகிருங்கள் உறவுகளே!

மிக வேகமாக கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கும் ,வழிமுறைகள் !!! பகிருங்கள் உறவுகளே!

மிக வேகமாக கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கும் ,வழிமுறைகள் !!!
பகிருங்கள் உறவுகளே!
அதிவேகமாக பரவுகிறது கொரோனா!!!
1720 ம் ஆண்டு பிரான்சில் பரவிய The Great plague (பிளேக்) எனும் தண்ணீர் வைரஸ் தொற்றால் (100.000) ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் France ல் மட்டும் இறந்தனர். இது போன்ற ஒரு கொடிய ஆபத்தான கொரோனா வைரஸ் தாக்குதலை நாம் இப்போது எதிர்நோக்கி இருக்கின்றோம்.
இன்று பரிசை அண்டிய 93 டிப்பாற்மென்ற் பகுதியை அண்டிய Montreuil பகுதியில் 2 பேர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
இன்றுடன் (02/03/2020) உலகளாவிய ரீதியில் 57 நாடுகளில் 90290 பேருக்கு மேல் பரவி உள்ளது.
பிரான்ஸ் ல் l'Oise மாவட்டத்தில் அதிகளவில் கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பாடசாலைகள் காலவரை அற்று மூடப்பட்டு உள்ளது.
இதுவரை 4 பேர் பிரான்சிலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 3084 ற்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
பிராண்சில்
28/02/2020 -73 பேர்
29/02/2020 -100 பேர்
01/03/2020-130 பேர்
02/03/2020- 191 பேர்
என்றவாறு பரவி பிரான்சின் 13 மாவட்டங்களில் இந்த கொறோனோ வைரஸ் பரவிவந்து கொண்டிருக்கின்றது.
இது சராசரியாக 30% வீதத்தால் நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியில் பரவி வருகிறது.
சீனாவில் ஆரம்பித்த கொறோனா வெறும் 62 நாட்களில் 57 நாடுகளில் 90.000ற்கு மேற்பட்ட மக்களுக்கு உலகளாவிய ரீதியில் பரவி உள்ளது என்றால் இந்த வைரஸ் மிக மிக ஆபத்தானதேதான்.
இந்த நோயின் தாக்கத்தால் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டாலும் ஏற்படுத்தப்படலாம்.
உணவு தட்டுப்பாடு நிலவலாம்.
பாடசாலை/ வர்த்தக நிலையங்கள் மூடப்படலாம். எனவே உணவுகளை தானியங்களை வேண்டிய அளவில் அல்லது அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்திருப்பது நல்லது.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க இரண்டு வழிகளே உண்டு .
 சுகாதார பழக்கம்
 உணவுப் பழக்கம்
கிருமி தொற்றுக்களை தவிர்க்க சில வழிமுறைகளை சுகாதார ரீதியிலும் ,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு பழக்க வழக்கங்களிலும் சிறிது மாற்றத்தை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
🔥வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீட்டுக்குள் வந்தால் அந்த உடையுடன் வீட்டுக்குள் நுளையக்கூடாது. மெற்றோ ரயில் bus போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் அதே உடையுடன் வீட்டுக்குள் கதிரை கட்டில்களில் அமருவதையும் தவிர்க்கவும்.
🔥வெளியில் இருந்து வந்தவுடன் தினமும் முழுகுதல் வேண்டும். சவர்க்காரத்தை அதிகளவு உடம்பில் உபயகப்படுத்தி முழுகவும்.
🔥குளிக்கும் போதும் . வெளியே இருந்து வீட்டிற்குள் வந்த பின்னரும் பல் துலக்கி நன்றாக சத்தமிட்டு காறி துப்பி வாயை தொண்டையை சுத்தப்படுத்தவும்.
🔥வெதுவெதுப்பான சுடுநீரில் உப்பு கலத்து வாய்களை கொப்பளிக்கவும்.
🔥குழந்தைகளை வெளியில் இருந்து வந்த உடனே தூக்கி அரவணைக்க வேண்டாம்.
🔥 கை வாய் துடைக்கும் ரிசு பேப்பர்களை ஒருதடவை பயன்படுத்தியவுடன் உடனே குப்பைத்தொட்டியில் எறியவும்.
🔥பாதணிகளை வீட்டுக்கு வெளியே வைக்கவும் .
🔥மாஸ்க்..(Mask)
மூக்கு வாய்பகுதிகளை மறைப்பதற்கு N95 அல்லது FFP2 அல்லது FFP3 தரத்தில் உள்ள மாஸ்க் களை மட்டும் பயன்படுத்தவும் .
இவை மட்டுமே கிருமி தொற்றலை தடுக்க கூடியவை. சாதாரண விலைகுறைந்த மாஸ்க்களை பயன்படுத்த வேண்டாம்.
🔥காச்சல் தும்மல் போன்றவை ஏற்பட்டால் வீட்டில் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் வைத்தியரை நாட வேண்டும்..
🔥மற்றவருடன் உரையாடும் போது 3-8அடி தூர இடைவெளிக்கு பின்னால் நின்று உரையாடவும்
🔥கொறோனா நோய் தொற்று கிருமி உடம்பில் வந்தவுடன் அதிக பட்சம் 21 நாட்கள் வரை எமது உடலில் அறிகுறிகளை வெளிக்காட்டாது எமது உடம்பில் தங்கி இருக்கக்கூடியது.
காய்சல் .தும்மல் மூக்கடைப்பு என்பன இந்த வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கும்
.
உணவில்
இஞ்சி.
மஞ்சள்
உள்ளி.
பெருங்காயம்.
சின்ன வெங்காயம்.
தேசிக்காய்.
இவற்றை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை மிக மிக அதிகம் உண்டு .
உள்ளி சின்னவெங்காயத்தை கறி சமைக்கும் போது வழமையை விட அதிகம் சேர்த்துக்கெள்ளலாம்.
சின்ன வெங்காயத்தை பச்சையாகவும் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
இஞ்சி-தேநீர் பால் உடன் கலந்து , கறி சமைக்கும் போதும் சிறு துண்டுகளாக or மசித்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
தேசிக்காய்- கொதித்து ஆறிய நீரில் தேசிக்காயை மெல்லிய கீற்றுக்களாக வெட்டி போட்டு
சிறிது நேரம் இடைவெளி விட்டு பருகலாம். தண்ணீர் போத்தல்களிலும் தேசிக்காயை துண்டாக நறுக்கி போட்டு பருகலாம்.
கறிகள் அனைத்துக்கும் வேறு புளிக்கு பதிலாக தேசிக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
புளிப்பு சுவை உடைய பழங்கள் இவற்றில் விற்றமின் C அதிகம் இருப்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் - தோடம்பழம். தேசிக்காய்
கொய்யா நெல்லிக்காய் என்பனவற்றில் விற்றமின் C அதிகம்.
நில வேம்பு கசாயம்- இது லாச்சப்பல் மளிகை கடைகளில் கிடைக்கும். இது சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு மருந்து. தமிழ் சித்த வைத்திய மருந்து இது. சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்
மாமிச உணவினை நன்றாக வேகவைத்து சமைத்து உண்ண வேண்டும். அடிக்கடி உண்பதை தவிர்க்கலாம்
சலாட் போன்ற பச்சையாக உண்னக்கூடிய உணவுகளை தவிர்க்கவேண்டும். பச்சையாக உண்ணக்கூடிய உணவுகளிலு வைரஸ் தொற்று இருந்தால் உண்பவர் உடம்பிலும் நேரடியாக பரவிவிடும் சாத்தியம் உண்டு.
கீரை வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உணவில் அதிகம் சேர்க்கலாம்
ஒன்லைன் உணவுகள், Fast food கடையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவுகள், sandwich, சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் விற்கப்படும் வீதியோர உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்கவேண்டும்.
பாண் உட்பட.
🧶கொரோனா- இது தமிழ் மொழி சொல் . கிரீடம் என்பது இதன் அர்த்தம். அதாவது இந்த வைரஸ் பார்க்கும்போது கிரீடம் வடிவம் கொண்டது...
இந்த வைரஸ் எமது உடம்பில் நுளைந்து 6-21நாட்கள்வரை எந்தவித அறிகுறியும் காட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது. இந்த கால கட்டத்தில் அவரை சுற்றி உள்ளவரர்களுக்கும் சத்தம் இல்லாமல் காற்றின் மூலம் குடும்பத்துக்கே பரவிவிடக்கூடியதது.. நாம் எம்மை பாதுகாப்பதால் எமது குடும்பத்தினரையும் நோய் தொற்று இல்லாது பாதுகாக்கலாம்.
இந்த தொகுப்பில் நல்ல விடையங்கள் இருக்கும் என்று எண்ணுபவர்கள் உங்கள் முகநூல் வட்ஸ் அப் ஆகியவற்றில் இதனை share பண்ணுங்கள்.
யாராவது உடலில் கிருமி தொற்றாமல் அவர்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கலாம்.
நன்றி
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |