Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல் - நால்வர் கைது!!



சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வட்சப் கணக்கு சிலர் ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தெரிவித்ததாவது,

தற்போது ஊரடங்கு சட்டம் எமது பிராந்தியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தை கடந்த 22 ஆம் திகதியில் இருந்து இளைஞர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் மீறி வருகின்றனர். சிலர் எமது பாதுகாப்பு தரப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். கைதான பலரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்துள்ளோம். எனினும் தற்போது ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் பிணை கூட இனி வரும் தினங்களில் கிடையாது. 6 மாத காலம் தடுப்புக்காவலில் கைதானவர்களை வைத்திருக்குமாறு எமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்மாந்துறை பகுதியில் வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்த நால்வரை கைது செய்துள்ளோம்.இவ்வாறு கைதானவர்கள் வட்சப் குழு ஒன்றினை உருவாக்கி அதனை வழிநடத்தியதுடன் பாதுகாப்பு தரப்பினர்களின் நடமாட்டம் குறித்து ஏனைய குழு உறுப்பினர்களுக்கு தகவல்களை பகிர்ந்துள்ளனர்.இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர்.ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் இதுவரை 27 பேர் பொலிஸாரினால் கைதாகியுள்ளனர்.அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் துவிச்சக்கரவண்டிகள் வாகனங்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.
வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல் - நால்வர் கைது

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments