Home » » மட்டக்களப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்க நடவடிக்கை-அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்க நடவடிக்கை-அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த்தாக்கம் இருக்கலாம் என கருதப்படும் நபர்களை தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் 

இவர்கள் கடந்த சில நாட்களாக வீடுகளில் தங்கி சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அரசினால் உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார்.

மாவட்டத்தில் செயல்ப்பட்டு வருகின்ற வேள்விசன் (World Vision) தனியார் நிறுவனம் நேற்று 650 உலர் உணவுப்போதிகளை அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர் அதனை தேவைப்படுவேர்களுக்காக பகிர்தழிப்பற்கு பிரதேசசெயலாளர்களுக்கு நேற்று கையளிக்கப்பட்டது.
இவ்வாறு தாமாகவே முன்வந்து உலர் உணவுப்பொருள் உதவிகளை வழங்கிவைத்த வேள்விசன் (World Vision) நிறுவனத்தின் வலைய முகாமையாளர் J.A.ரமேஸ்குமார் அவர்களின் இத்தகைய சேவையிவைக்கு பாராட்டு தெரித்தார் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா.

மக்களுக்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் தங்களின் விருப்பத்திற் கொண்டு சென்று வழங்காமல் பிரதேச செயலகங்களினுடாக அல்லது அரசாங்க அதிபருடாக மாத்திரம் வழங்களாம் எறும் இவ்வாறு உதவ முன்வருகின்ற கொடையாளர்கள் நலன் விரும்பிகள் மாவட்ட செயலகத்துடன் அல்லது அரசாக அதிபருடன் தொடர்புகொண்டு வழங்கலாம் எனவும் தனி நபர்களுக்கோ சமூகவலைத்தளங்கள் மூலமாகவோ உதவுவதை நிறுத்துமாறு அரசாங்க அதிபரி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |